அரங்கன் சிலை மீட்பு
திருவரங்கத்திலிருந்து அரங்கனை மீட்க வேண்டி, தலைமை பட்டர் குழு மாலிக் கஃபூரிடம் கோரிக்கை வைக்க, அவரும் அரங்கன் சிலையை திருப்பித் தருகிறார். ஆனால், இளவரசி சுரதானி, அரங்கன் சிலையைக் காணவில்லை என பதறியழுகிறாள். சிலையை மீட்டுத்தருமாறு தந்தை சுல்தானைக் கேட்கிறாள். ஆனால் சுல்தான் அதை மறுத்துவிட மனமொடிந்த சுரதானி, உண்ணாமல், உறங்காமல், நோய்வாய்ப்பட்டுபோகிறார்.

இஸ்லாமிய இளவரசி சுரதானிதான் துலுக்கை அம்மனாகப் போற்றப்படுகிறார்.
குதிரையில் பயணித்து திருவரங்கம் வந்துசேர்ந்த சுரதானி, அரங்கன் கோயிலில் உற்சவர் சிலை இல்லாமல் கோயில் மூடியிருப்பதைக் கண்டு, அங்கேயே மயக்கமடைந்து விழுகிறாள். அவள் உடலிலிருந்து ஓர் ஒளி எழுந்து, அரங்கனுடன் சேர்ந்ததைக் கண்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
இந்த இஸ்லாமிய இளவரசி சுரதானிதான் துலுக்கை அம்மனாகப் போற்றப்படுகிறார். முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாது என்பதால் சிலையாய் வைக்காமல், அரங்கன் சந்நிதியிலேயே, அர்ச்சுன மண்டபத்திற்கு எதிராக சுரதானி என்ற துலுக்க நாச்சியாரை, சித்திரமாக வரைந்து சந்நிதியில் வைத்து இப்போதும் வழிபடுகிறார்கள் பக்தர்கள். அவரது பெயரால் மதுரைக்கு வெளியே வண்டியூர் பெருமாள் கோவிலும் இந்த துலுக்க நாச்சியார் அம்மனை வழிபடுகிறார்கள்.
இது கற்பனைக் கதையோ, உண்மையோ தெரியவில்லை. ஆனால், “ஏழைகளுக்கிரங்கும் பெருமாள், ஆபரணங்களுக்கு அழகுசேர்க்கும் பெருமாள், துலுக்க நாச்சியாரோடு பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்” என்று திருவரங்கனைத் தமிழில் துதிக்கும்போதே “கடலுக்குள் பிரிவும் இல்லை… கடவுளில் பேதமும் இல்லை” என்று கண்ணதாசன் சொன்னது சரித்திரம் முழுவதும் உண்மையாகக் காணக் கிடைக்கிறது.
துலுக்க நாச்சியார் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்!